நகைச்சுவை நடிகர் சிங்கமுத்துவின் மகன் வாசன் கார்த்திக் நாயகனாக நடித்துள்ள படம் ‘நாடோடி வம்சம்’. கோயம்புத்தூர் ஆர்.விஸ்வநாதன் ஸ்ரீ பெரியநாயகி அம்மன் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
நாடோடி வம்சத்தைச் சேர்ந்தவரான வாசன் கார்த்திக், இரண்டு தாதாக்களுடன் மோதி நாடோடி வம்சத்தின் அடிமை விலங்கை உடைத்தெறிபவராகப் படத்தில் நடித்திருக்கிறார். அதோடு, காமெடி, சென்டிமெண்ட் காட்சிகளிலும் நன்றாக நடித்திருக்கிறாராம்.
நாயகியாக அர்ச்சனா நடித்திருக்கிறார். வாசன் கார்த்திக்குடன் சேர்ந்து இவர் நடித்திருக்கும் ரொமான்ஸ் காட்சிகளைப் பார்த்து படப்பிடிப்பு குழுவினரே வியந்திருக்கிறார்கள்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதுபோலவே, வடிவேலு நடித்துள்ள ‘ஜெகஜால புஜபல தெனாலிராமன்’ படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது.
‘ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்’ படம் வெளியாகும் தேதியன்றே வாசன் கார்த்திக் நடித்துள்ள படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள் படக்குழுவினர்.
இதன்மூலம் வடிவேலு - சிங்கமுத்து மீண்டும் மோதிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
No comments: