தற்போது அதிகம் பேரால் கவனிக்கப்பட்டு, பாராட்டு பெற்றவர் விஜய் சேதுபதி.
குறும்பட இயக்குநர்கள் வெள்ளித்திரையில் அறிமுகமாகும் படங்களில் அநேகமாக விஜய் சேதுபதிதான் ஹீரோவாக நடித்திருப்பார்.
சீனியர் ஆர்டிஸ்ட்டுகள் எல்லாம் விஜய் சேதுபதியை வாயாரப் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.இந்த சமயத்தில் பாலாவுடன் இணைகிறார் விஜய் சேதுபதி.
பாலாவின் தயாரிப்பு நிறுவனமான பி ஸ்டுடியோஸ் 'வசந்த குமாரன்' படத்தைத் தயாரிக்கிறது. இதில் ஹீரோவாக நடிக்கிறார் விஜய் சேதுபதி.
ஆனந்த் கிருஷ்ணன் இயக்கும் இப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.
ஸ்டுடியோ நைன் , பி ஸ்டுடியோஸ் என்ற இரு தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து ரொமான்ஸ் ப்ளஸ் ஃபேமிலி என்டர்டெய்னர் படத்தைத் தயாரிக்கிறார்கள்.
No comments: