கார்த்தி தற்போது 'அட்டகத்தி' ரஞ்சித் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தையடுத்து லிங்குசாமி இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார்.
இப்படத்தினை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு 'எண்ணி ஏழுநாள்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

தற்போது சூர்யா, சமந்தா நடிப்பில் 'அஞ்சான்' படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் லிங்குசாமி, ஆகஸ்ட் 15ம் தேதி இப்படம் வெளியான பின்பு கார்த்தி நடிக்கும் படத்தை இயக்குவாராம்.
'பையா' படத்திற்குப் பின்பு கார்த்தி - லிங்குசாமி இணையும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments: