முன்பெல்லாம் நடிகைகளின் சம்பளம் 5 லட்சம் 10 லட்சம் என்றுதான் இருந்தது. ஆனால், இப்போது அப்படியல்ல,. அறிமுகமாகி சில படங்கள் வரை அடக்கி வாசிக்கும நடிகைகள், முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து விட்டால் 50 லட்சம் 60 லட்சம் என்று கேட்கிறார்கள். அதோடு, அப்படி முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் படங்கள் ஹிட்டடித்தால் ஒரு கோடியும், அதற்கு மேலும் கேட்கிறார்கள்.
இந்த விசயத்தில் ஹன்சிகாவை எடுத்துக்கொண்டால், சேட்டை படம் வெற்றி பெற்றால் ஒரு கோடி சம்பளம் கேட்க நினைத்திருந்தார். ஆனால் அந்த படம் தோற்று விட்டதால் அவரால் 60 லட்சத்தை தாண்ட முடியவில்லை. அதையடுத்து சிம்புவுடன் இரண்டு படங்களில கமிட்டானவர், காதல் வலையிலும் விழுந்ததால், அதன்பிறகு படத்துக்குப்படம் சம்பளத்தை ஏற்றுவதை மறந்து சிம்புவுடன் காதல் மொழி பேசுவதிலேயே நேரத்தை செலவிட்டார்.
ஆனால். இப்போது அவருடனான காதலை முறித்து விட்டதால், மறுபடியும் கரன்சி பக்கம் கவனத்தை திருப்பி விட்டார் ஹன்சிகா. அந்த வகையில், மான்கராத்தே படத்தில் நடிப்பதற்கு ஒரு கோடி கேட்டவர். அதன்பிறகு கமிட்டாகியுள்ள படங்களில் நடிக்க ஒன்னே கால் கோடி கேட்டு வாங்கியுள்ளார். மேலும் இதன்பிறகு நடிக்கும் படங்களுக்கு கதை கேட்டிருப்பவர், சம்பளம் பற்றி பேசவில்லை.
ஒருவேளை இந்த இரண்டு படங்களுமே ஹிட்டடித்தால் ஒன்னே காலை ஒன்றரை கோடியாக்கும் திட்டத்தில் இருக்கிறார் ஹன்சிகா. அதனால் இப்போது யார் கதை சொல்லச்சென்றாலும் கதையை கேட்பதோடு சரி, சம்பளம் என்ன கேட்கிறீர்கள் என்று கேட்டால், மீகாமன், ரோமியோ ஜூலியட் ரிலீசுக்கு அப்புறம் சொல்றேன் என்கிறாராம் ஹன்சிகா.

No comments: