காதல் ரோஜாவே என்ற தமிழ் படத்தில் அறிமுகமானவர் தான், பூஜா குமார். அதையடுத்து ஹாலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில், 13 ஆண்டுகளாக நடித்து வந்த பூஜா, விஸ்வரூபம் படத்தில் துப்பாக்கியை கையிலெடுத்து, அதிரடிநடிகையாகவும் உருவெடுத்து,ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார். ஆனால், தற்போது விஸ்வரூபம்-2ல் பூஜாவின் நடிப்பு, இன்னும் பெரியஆச்சர்யத்தைக் கொடுக்கப்போகிறதாம்.
காதல் காட்சிகளில், ஹாலிவுட் பாணியில் முத்தம், யுத்தம் என்றெல்லாம் நடித்துள்ள பூஜா, ஆக் ஷன் காட்சிகளிலும் அட்டகாசமாக நடித்துள்ளாராம். ஏற்கனவே, ஹாலிவுட் படங்களில் சண்டை செய்த அனுபவம் இருப்பதால், எதிரிகளை பறந்து பறந்து அடித்து, சாகசம் செய்திருக்கிறாராம் பூஜா.
No comments: