» »Unlabelled » தனி மீது வந்த‌ விமர்சனத்தால் டென்சனான கத்ரீனா கைப்

பாலிவுட் சினிமாவில் கடந்த 11 ஆண்டுகளாக நடித்து வருபவர் கத்ரீனா கைப். ஹாலிவுட் நடிகையான இவருக்கு ஆரம்பத்தில் இந்தி ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு காரணமாக அதன்பிறகு ஹாலிவுட்டுக்கு செல்லாமல் பாலிவுட்டிலேயே தங்கி விட்டார். சல்மான்கான், அமீர்கான், ஹிருத்திக்ரோஷன் என பாலிவுட்டின் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் பெரிய ரவுண்டே வந்து கொண்டிருக்கும் கத்ரீனா கைப், படத்துக்குப்படம் செக்சியான நடிப்பை வெளிப்படுத்தி வருவதால், அவருக்கான இளவட்ட ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறார்கள்.
இந்தநிலையில, சமீபத்தில் ஒரு இந்தி சேனலில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், பாலிவுட்டில் உள்ள பல நடிகைகளின் திறமையை பெருமையாக பேசிய நேயர்கள், கத்ரீனாவுக்கு நடிக்கவே தெரியாது, கவர்ச்சியை வைத்துதான் காலம் தள்ளி வருகிறார் என்பது போன்று விமர்சனம் செய்தார்களாம். இந்த சேதி கத்ரீனாவை அப்செட்டாக்கி உள்ளதாம்.
இருப்பினும், நேயர்களின் கருத்துக்கு நான் உடன்படுகிறேன். அதேசமயம் அவர்களின் இந்த கருத்து எனது மார்க்கெட்டை எதுவும் செய்து விட முடியாது. காரணம் என்னை ரசிக்க வேண்டுமென்று தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் வருகிறது என்று தெரிவித்திருப்பவர், இதுபோன்ற விமர்சனங்களை தவிர்க்க, இனிவரும் படங்களில் இன்னும் திறமையை வெளிப்படுத்தி நடிக்க தான் முயற்சி செய்யப்போவதாகவும் கூறியிருக்கிறார்.

About Admin

Hi there! I am Hung Duy and I am a true enthusiast in the areas of SEO and web design. In my personal life I spend time on photography, mountain climbing, snorkeling and dirt bike riding.
«
Next
Jiiva Yan Shooting Spot Stills
»
Previous
பூஜா குமார்ரின் சாகசம்!

No comments:

Leave a Reply