'நிமிர்ந்து நில்' படம் அமலாபாலை இன்னும் உற்சாகப்படுத்தி இருக்கிறது. நல்ல படம், நல்ல நடிப்பு என்று பாராட்டியதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் அமலாபால்.
'மைனா', 'தலைவா' படங்களுக்குப் பிறகு 'நிமிர்ந்து நில்' படம் தான் அமலாபாலை அதிக சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கிறதாம்.
''சமூக கருத்துகளை சரியாகச் சொல்வதில் சமுத்திரக்கனி நிமிர்ந்து நிற்கிறார். சிறந்த நடிகைக்கான எல்லா நுணுக்கங்களையும் என் நடிப்பில் வெளிப்படுத்தியாகப் பாராட்டுகிறார்கள்.
மீண்டும் சமுத்திரக்கனி இயக்கும் படத்தில் டபுள் ரோலில் நடிக்கிறேன். என் சினிமா கேரியரில் இந்தப் அப்டம் முக்கியமானதாக இருக்கும்.
இன்னும் நான் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்'' என்கிறார் அமலாபால்.
No comments: